search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரத் யாதவ்"

    • இந்திய அரசியலில் பதவிகளை பெரிதாக மதிக்காமல் கொள்கையை உயிர்மூச்சாக கொண்ட தலைவர்களில் சரத்யாதவ் குறிப்பிடத்தக்கவர்.
    • 1960-களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சரத்யாதவ், அவரது 22-வது வயதிலேயே அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறை சென்ற வரலாறு கொண்டவர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் மத்திய அமைச்சரும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தேசியத் தலைவர்களில் ஒருவருமான சரத் யாதவ் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

    இந்திய அரசியலில் பதவிகளை பெரிதாக மதிக்காமல் கொள்கையை உயிர்மூச்சாக கொண்ட தலைவர்களில் சரத்யாதவ் குறிப்பிடத்தக்கவர். 1960-களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சரத்யாதவ், அவரது 22-வது வயதிலேயே அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறை சென்ற வரலாறு கொண்டவர். 1989-ம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அவர், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் பிரதமருக்கு துணை நின்றவர். சமூகநீதிக்காக குரல் கொடுத்தவர்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். டெல்லியில் இருக்கும் நாட்களில் என்னை பலமுறை அழைத்து பேசியிருக்கிறார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் அவரை நான் பலமுறை சந்தித்து நலம் விசாரித்தேன். கடுமையான உடல்நலக் குறைவிலிருந்து அவர் நலம் பெற்று மீண்ட போது நான் மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைந்தேன். அவரது திடீர் மறைவை ஏற்றுக்கொள்வதற்கு எனது மனம் மறுக்கிறது.

    சரத்யாதவின் மறைவு சமூகநீதி இயக்கங்களுக்கு பின்னடைவு ஆகும். சரத்யாதவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சமூகநீதி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சரத் யாதவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் காலமானார். சரத் யாதவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அந்த டுவிட்டர் பதிவில், " முன்னாள் அமைச்சர் சரத் யாதவின் மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது. பல தசாப்தங்களாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக நாட்டிற்கு சேவை செய்து சமத்துவ அரசியலை வலுப்படுத்தியவர். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • ராஷ்டீரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவின் மறைவால் மிகவும் வேதனை அடைந்தேன்.
    • சோசலிச இயக்கத்தின் மிக உயரிய தலைவராக விளங்கிய சரத் யாதவ் தமது இறுதி மூச்சு வரையிலும் மக்களாட்சி மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டவராய்த் திகழ்ந்தவர் ஆவார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ராஷ்டீரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவின் மறைவால் மிகவும் வேதனை அடைந்தேன். சோசலிச இயக்கத்தின் மிக உயரிய தலைவராக விளங்கிய சரத் யாதவ் தமது இறுதி மூச்சு வரையிலும் மக்களாட்சி மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டவராய்த் திகழ்ந்தவர் ஆவார். அன்னாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • வாஜ்பாய் அமைச்சரவையில் சரத் யாதவ் 1999-2004-ல் மத்திய மந்திரியாக இருந்தார்.
    • முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சியின் தலைவருமான சரத் யாதவ் (75), நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் உடல்நிலை மோசமடைந்து குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரான சரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய மந்திரியாக இருந்தார். 2017ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, லாலு பிரசாத் யாதவ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், சரத் யாதவ் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சரத் யாதவ் ஜி சோசலிசத்தின் தலைவராக இருப்பதுடன் அடக்கமான இயல்புடையவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

    • முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
    • சரத் யாதவ் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய மந்திரியாக இருந்தார்.

    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சியின் தலைவருமான சரத் யாதவ் (75), நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் உடல்நிலை மோசமடைந்து குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரான சரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய மந்திரியாக இருந்தார். 2017ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவால் அரியானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

    சரத் யாதவ் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியி, சரத் யாதவ்ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில், எம்.பி., மற்றும் மந்திரி என தனித்து விளங்கினார். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எங்களின் தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி" என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவரான சரத் யாதவ் இன்று காலமானார்.
    • சரத் யாதவ் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் இன்று இரவு காலமானார்.

    குருகிராமில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது என அவரது மகள் சுபாஷினி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    சரத் யாதவ் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளாராக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×